728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, November 16, 2016

    ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்


    ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆவா குழு என்ற பெயரில் வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 சந்தேக நபர்கள் இன்று மீண்டும் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

    இவர்களின் விளக்கமறியல் காலம் முடிவுற்றதையடுத்து, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 11 சந்தேக நபர்களையும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7(2) பிரிவின் கீழ் வரும் 30ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கல உத்தரவிட்டார்.

    ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேரை இதுவரையில் கைது செய்து விசாரித்து வருவதாக, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top