728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, November 19, 2016

    நாட்டில் ஊடக சுதந்திரம் கிடையாது: மஹிந்த


    நாட்டில் ஊடக சுதந்திரம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    களனியில் நேற்று நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில்,

    நாட்டில் தற்போது மிகவும் சிறந்த ஊடக சுதந்திரம் காணப்படுகின்றது. கொஞ்சம் அங்கே இங்கே மாறினாலும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவை மூடப்பட்டுள்ளது. தெரண ஊடகப் பிரிவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஊடக நிறுவன உரிமையாளர்கள் அழைக்கப்பட்டு கெட்ட வார்தைகளினால் திட்டப்படுகின்றனர்.

    நாட்டில் இவ்வாறான ஓர் ஊடக சுதந்திரமே காணப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டில் ஊடக சுதந்திரம் கிடையாது: மஹிந்த Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top