728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, November 16, 2016

    இரு நாடுகளுக்கு இடையில் குற்றவாளிகளை ஒப்படைக்கும் புதிய ஒப்பந்தம்


    குற்றவாளிகளை ஒப்படைக்கும் புதிய ஒப்பந்தமொன்று இலங்கை மற்றும் பெலரூஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ளது.

    பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    குற்றங்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளுக்குமிடையில் பலனுள்ள ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளல் இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவமாகும்.

    மேலும், சந்தேகநபர்களை குறித்த நாட்டுக்கு அனுப்புதல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை இலகுபடுத்தும் நோக்கிலும் இந்த ஒப்பந்தம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரு நாடுகளுக்கு இடையில் குற்றவாளிகளை ஒப்படைக்கும் புதிய ஒப்பந்தம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top