728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, February 22, 2018

    இதுவரை படமே இயக்கவில்லை: தல அஜித்திற்காக தவமாய் தவமிருக்கும் இயக்குனர்!


    தல அஜித்தை வைத்து இதுவரை ஒரு படம் கூட இயக்கவில்லை என்று இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மோகன் ராஜா. இவர், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, உனக்கும் எனக்கும், தனிஒருவன் ஆகிய படங்களை தனது தம்பி ஜெயம் ரவியை வைத்தே இயக்கியுள்ளார்.

    இப்படங்களைத் தொடர்ந்து வேலாயுதம், வேலைக்காரன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். மாஸ் சூப்பர் ஹீரோ விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர் இவரது இயக்கத்தில் நடித்துள்ள நிலையில் தல அஜித் மட்டும் இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

    இது இயக்குனர் மோகன் ராஜாவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக இயக்குனர் மோகன் ராஜா கூறுகையில்,

    எப்போதும் தல அஜித்திடம் நான் கதை சொல்லப் போனால், அவர் கண்டிப்பாக ஓகே சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். அந்தளவிற்கு அவர்களை நான் இம்ப்ரஸ் செய்ய வேண்டும்.

    அஜித்திற்காக இதுவரை யாரும் யோசிக்காத ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளார். இந்த கதையை கண்டிப்பாக நான் அவரிடம் சொல்லி ஓகே வாங்குவேன் என்று கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இதுவரை படமே இயக்கவில்லை: தல அஜித்திற்காக தவமாய் தவமிருக்கும் இயக்குனர்! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top