728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, February 22, 2018

    மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு கிடைத்த வாய்ப்பு


    மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு, சிறிய ரக விமானங்கள் தயாரிக்க 35,000 கோடி ஒப்பந்தத்தை மகாராஷ்டிர அரசு அளித்துள்ளது.

    மும்பையை சேர்ந்தவர் அமோல் யாதவ். தனியார் விமான நிறுவனத்தில் மூத்த விமானியாக பணியாற்றியவர். விமானங்கள் தயாரிப்பதிலும் இவருக்கு அதீத ஆர்வம் உண்டு.

    மும்பையில் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் விமானம் தயாரிப்பதாக கூறிவந்த இவர். உண்மையிலேயே அதை சாதித்து காட்டினார். லிப்ட் வசதி இல்லாத நிலையிலும், விமான இயந்திரம் உள்ளிட்டவற்றை மாடிக்கு தூக்கிச்சென்று தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

    13 ஆயிரம் கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய சிறிய ரக விமானத்தை தயாரித்தார். தர்ஸ்ட் ஏர்கிராப்ட் பெயரில் நிறுவனத்தை உருவாக்கி விமான தயாரிப்பில் ஈடுபட்டார்.இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அவருக்கு சான்றிதழ் வழங்கி கௌவித்தது.

    இதற்கு இந்திய விமான போக்குவரத்து துறையும் இந்த விமானம் வானில் பறக்க அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இதில், சிறிய அளவிலான விமானத்தை தயாரித்து வழங்க மகாராஷ்டிர அரசு 35,000 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

    இதற்காக, தொழிற்சாலை அமைக்க மும்பை அருகே பால்கர் மாவட்டத்தில் 157 ஏக்கர் நிலத்தை இவரது திரஸ்ட் ஏர்கிராப்ட் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இங்கு சுமார் 19 பேர் பயணிக்கும் வகையில் 1,300 சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்படும் எனவும், இதனால் சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு கிடைத்த வாய்ப்பு Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top