அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இதனிடையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் படத்தின் காமெடி நடிகர்களாக யோகி பாபு, தம்பி ராமைய்யா கமிட்டானதை தொடர்ந்து படக்குழுவினர் ரோபோ ஷங்கரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரோபோ ஷங்கரும் நடிக்கிறாரா இல்லையா என்பது இரண்டு நாட்களில் உறுதியாக தெரிந்துவிடும்.
விசுவாசம் படத்தில் அஜித்-சிவா நான்காவது முறையாக கூட்டணி அமைக்க, நயன்தாரா நாயகியாகவும், டி.இமான் இசையமைப்பாளராக கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment