சீனாவின் குவாங்சோ நகரிலிருந்து ஷங்காய் நகருக்குச் சென்ற விமானத்தில்
(power bank) ஒன்று வெடித்ததால் பரபப்பு ஏற்டபட்டது,பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
China Southern Airlines நிறுவனத்தின் CZ3539 விமானத்தில் வைக்கப்பட்டிருந்த பயணி ஒருவரின் பையில் தீப்பிடித்தது.
தீயணைப்பு, பாதுகாப்புப் பிரிவுகளின் உதவியோடு தீ அணைக்கப்பட்டது.
பாதிப்புகள் அவ்வளவாக ஏற்படவில்லை என விமான நிறுவனம் கூறியது.
பையின் உரிமையாளர் காவல்துறை விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார்.
முதற்கட்ட விசாரணைகளில் தீப்பிடித்தபோது power bank பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்பட்டது.
தீச்சம்பவம் ஏற்பட்ட விமானத்துக்குப் பதிலாக வேறொரு விமானம் பயணத்தைத் தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சீனா நேரப்படி குவாங்சோ பையுன் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து விமானம் 2.53 மணிக்குக் கிளம்பியது. திட்டமிட்ட நேரத்தைவிட அது மூன்று மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.
பயணிகளும் விமான ஊழியர்களும் தீயை அணைக்கும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
மின்னியல் ஸ்கூட்டர், கைபேசி, மடிக்கணினி, போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்களினால் தீப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது.
அதனால், பயணிகளுக்கான விமானத்தில் பொருட்களை ஏற்றும் பகுதியில் அத்தகைய மின்கலன்களைக் கொண்டுசெல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் கையில் தூக்கிச் செல்லும்பெட்டிகளில் அவற்றை எடுத்துச் செல்லலாம்.

0 comments:
Post a Comment