728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, February 26, 2018

    ஐ.பி.எல் அணியின் தலைவரானார் அஸ்வின்


    ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் யுவராஜ் சிங் மற்றும் மே.தீவுகள் அணியின் கிரிஸ் கெயில் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இருக்கும் போதும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தலைவர் பதவியை நிர்வாகம் வழங்கியுள்ளது.

    அஸ்வின் கடந்த பல மாதங்களாக இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 குழாமில் இணைக்கப்படாத போதும், அவரை நம்பி குறித்த பணியை ஒப்படைத்தமைக்கு தனது நன்றியினை அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பில் அஸ்வின் கூறுகையில்,

    “உலகின் முன்னணி வீரர்கள் இருக்கும் அணிக்கு தலைமை தாங்குவது குறித்து நான் பெருமையடைகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு அணியை முன்னேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.

    “அணித்தலைமை பொறுப்பானது எனது பந்து வீச்சுக்கு எந்தவித அழுத்தத்தை தராது. ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் அணித்தலைவராக செயற்பட்டுள்ளேன். அதனால் இந்த சவாலை என்னால் சந்தோஷமாக எதிர்கொள்ள முடியும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

    இதேவேளை அஸ்வின் சென்னை அணியிலிருந்து நீங்கினாலும், பஞ்சாப் அணியின் தலைமை பொறுப்பை ஏற்றமைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.பி.எல் அணியின் தலைவரானார் அஸ்வின் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top