728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, February 24, 2018

    மீண்டும் திருமணம் செய்துகொள்கிறேன்: சன்னிலியோன் அதிர்ச்சி தகவல்


    பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பாலிவுட் திரைப்படங்களிலும் தமிழில் 'வீரமாதேவி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

    மேலும் சன்னிலியோனுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவருடன் திருமணம் நடந்தது என்பதும் இருவரும் சேர்ந்து கடந்த ஆண்டு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

    இந்த நிலையில் சன்னிலியோன் சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'நீங்கள் இதை எதிர்பார்க்கிறீர்களா அல்லது இல்லையா? என்பது எனக்குத் தெரியாது ஆனால் நான் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறேன். ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார்.

    இந்த டுவீட் அவருடைய ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது. கணவர் டேனியலுடன் சுமூகமான உறவில் இருக்கும் சன்னிலியோன் இன்னொரு திருமணம் ஏன் செய்து கொள்ள போகிறார்?

    ஒருவேளை திரைப்படத்தில் நடிக்கும் கேரக்டர் குறித்து கூறுகின்றாரா? என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர். இதற்கு அவரே மீண்டும் சரியான விளக்கம் அளித்தால் மட்டுமே இந்த புதிர் விடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மீண்டும் திருமணம் செய்துகொள்கிறேன்: சன்னிலியோன் அதிர்ச்சி தகவல் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top