பிரதமர் எத்துவா பிலிப் அறிவித்த SNCF தொடர்பான சீர்திருத்த சட்டத்தினை CGT தொழிற்சங்கம் ஏற்க மறுத்துள்ளது.
இதனால் வரலாற்றில் இல்லாத அளவு மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
CGT தொழிற்சங்க பொது செயலாளர் Laurent Brun நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போது, ‘அரசு எங்கள் கோரிக்கையினை ஏற்க மறுத்துள்ளது. அரசினை வளைக்கும் முகமாக ஒரு மாத கால ஆர்ப்பாட்டம் மற்றும் பணி பகிஷ்கரிப்பினை முன்னெடுக்க உள்ளோம்.
SNCF வரலாற்றிலேயே முதல் முறையாக இதுபோன்ற ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.’ என Laurent Brun தெரிவித்தார்.
மார்ச் 22 ஆம் திகதியில் இருந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கபடலாம் என அறிய முடிகிறது.

0 comments:
Post a Comment