728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, February 25, 2018

    நைஜீரியாவில் பள்ளி மீது தீவிரவாதிகள் தாக்குதல் -110 மாணவிகளை கடத்திச் சென்ற கொடுமை


    நைஜீரியாவில் பள்ளி மீது தாக்குதல் நடத்திய போகோ ஹாரம் தீவிரவாதிகள், 110 மாணவிகளை கடத்திச் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள டாப்ச்சி ((dapchi)) நகரில் உள்ள பெண்கள் பள்ளியில் கடந்த வாரம் போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    அப்போது ஆசிரியர்களும், மாணவிகளும் ஆங்காங்கே சிதறி ஓடி மறைந்துள்ளனர். அவர்களில் 110 மாணவிகளின் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.

    எனவே அவர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த தீவிரவாதிகள் 2014ஆம் ஆண்டில் 270 மாணவிகளை கடத்திச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நைஜீரியாவில் பள்ளி மீது தீவிரவாதிகள் தாக்குதல் -110 மாணவிகளை கடத்திச் சென்ற கொடுமை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top