தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார், விரைவில் கட்சியின் பெயர், கொடி ஆகியவை அறிவிக்கப்பட உள்ளது.
இது ஒரு புறம் இருந்தாலும் தன்னுடைய அடுத்த படத்திற்காக அட்லீ, அருவி பட இயக்குனர் அருண் மற்றும் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளார்.
பின்னர் இறுதியாக கார்த்திக் சுப்புராஜ் கதைக்கு டிக் அடித்து அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன, விக்ரம் வேதா படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment