மறுபிரேத பரிசோதனை அல்ல தடய அறிவியல் ஆய்வுக்கு மட்டுமே என விளக்கம் அளிக்கபப்ட்டுள்ளது.
துபாய் காவல் நிலையத்திற்கு சென்ற இந்திய தூதரக அதிகாரிகளை துபாய் போலீஸ் திருப்பி அனுப்பியது.அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் கிடைக்காததால் ஸ்ரீதேவி உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் தலையின் பின்புறத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து காயம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய துபாய் அரசு வழக்கறிஞர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் நடந்த கணவர் போனிகபூரின் மைத்துனர் மோகித் மார்வா திருமணத்தில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார்.
திருமண நிகழ்ச்சி முடிந்ததும் இரவு தான் தங்கி இருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலுக்கு சென்று தங்கினார். அவருடன் கணவர் போனிகபூர், மகள் குஷி ஆகியோரும் தங்கி இருந்தனர்.
அப்போது குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் கணவர் போனிகபூர் கதவை தட்டினார். ஆனால் கதவை திறக்காததால் பதட்டம் அடைந்த போனிகபூர் ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.
உள்ளே ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சுயநினைவின்றி மூழ்கி கிடந்தார். இதைப் பார்த்து கதறித் துடித்த அவர் போலீசுக்கும் ஆம்புலன் சுக்கும் தகவல் கொடுத்தார்.

அவர்கள் வந்து ஸ்ரீதேவியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
துபாய் நாட்டின் கடுமையான சட்ட விதிகளின்படி, ஆஸ்பத்திரிக்கு வெளியே மரணம் அடைந்தால் தீவிர விசாரணைக்குப் பிறகே உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
துபாய் நாட்டின் கடுமையான சட்ட விதிகளின்படி, ஆஸ்பத்திரிக்கு வெளியே மரணம் அடைந்தால் தீவிர விசாரணைக்குப் பிறகே உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதனால் ஸ்ரீதேவியின் உடல் உடனடியாக துபாய் போலீஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது.

0 comments:
Post a Comment