வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்-சிவாவின் அடுத்த படம் விசுவாசம். இப்பட தொடக்கம் முதல் ரசிகர்களுக்கு எந்த ஒரு பரபரப்பையும் தராமல் படக்குழு அதிரடியாக படத்தை பற்றிய விஷயங்களை வெளியிடுகின்றனர்.
முதன்முதலாக படத்தின் பெயர் அதிரடியாக வந்ததை ரசிகர்கள் அப்படி கொண்டாடினர். படத்தின் நாயகி முதல் இசையமைப்பாளர் வரை அனைவரையும் படக்குழு தேர்வு செய்துவிட்டனர். தற்போது வந்த தகவல்படி, இப்படத்தில் நடிக்க வைக்க தம்பி ராமைய்யாவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இது சரியான தகவலா என்பது தெரியவில்லை. ஆனால் இதற்கு சிவா-அஜித் கூட்டணியில் வந்த வீரம், வேதாளம் படங்களில் தம்பி ராமைய்யா நடித்திருந்தது.

0 comments:
Post a Comment