மலையாள நடிகை நிமிஷா படப்பிடிப்பு இடைவேளையின் போது கிராமத்திலுள்ள தேநீர் கடை ஒன்றில் பரோட்டா செய்யக் கற்றுக் கொள்ளும் விடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் பரவி வருவதுடன், ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அதுமட்டும் இல்லை. இன்ப அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள் நடிகையை பாராட்டியும் வருகின்றனர். இதுவரை இரண்டே படங்களில் நடித்துள்ள நிமிஷா, ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
இது போன்ற காட்சிகள் ஏன் ரசிக்கபடுகின்றன என்பது புரியாத புதிர்தான். பிரியாவின் புருவ அசைவுகளாகட்டும், நிமிஷாவின் பரோட்டா நிமிடங்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்ட நிலையில், இந்த நடிகைகள் திடீர் புகழுக்கு ஏற்ப தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பம்.
The ladies of the Malayalam film industry are on a viral video roll and the latest addition to this bandwagon is Nimisha Sajayan. A video of the actor in which she is seen making parottas on the sets of a film has gone viral.

0 comments:
Post a Comment