பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியாவின் ரொமான்ஸை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இதில் ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம் கமலையே ஷாக்காக்கியது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் இதைபற்றி கேட்காமல் இருப்பதில்லை.
அந்தவகையில் சமீபத்தில் நடந்த விகடன் விருதுவிழாவில் ஓவியாவிடம் காமெடி நடிகர் சதீஷ்ஷும், ரோபோ ஷங்கரும் அடம்பிடித்து முத்தம் வாங்கினார்கள்.
பின்னர் ஆரவ் வந்தபோது அவரிடமும் அந்த முத்தம் எப்படி தந்தீர்கள், ஒருமுறை ரோபோஷங்கருக்கு கொடுங்கள் என்று சதீஷ் கிண்டலாக கேட்க,
ஆரவ் அதற்கு மருத்துவமுத்தம் மறைவாகத்தான் கொடுக்கமுடியும் வரச்சொல்லுங்கள் என்று கலாய்த்தார். இப்படியே அந்த விருது வழங்கும் விழாவும் கலகலப்பாகவே முடிந்தது.

0 comments:
Post a Comment