728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, February 27, 2018

    விசா விண்ணப்ப அமைப்புமுறையை தனியார்மயமாக்குவதற்கு அரசாங்கம் திட்டம்


    உலகளாவிய புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், விசா விண்ணப்பங்களை பெறுவது, செயலாக்குவது போன்ற பணிகளை பிரத்தியேக தனியார் டிஜிட்டல் வழங்குநர் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

    அவுஸ்திரேலியாவின் விசா விண்ணப்ப அமைப்புமுறையை தனியார்மயமாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், அவுஸ்திரேலியாவின் புதிய விசா வர்த்தகத்திற்கு ஓர் உலகளாவிய டிஜிட்டல் தளத்தை வடிவமைத்து, செயல்படுத்துவதற்கு ஒரு தனியார் வழங்குனரைத் தேடுகிறது.

    உள்விவகார திணைக்களத்தின் உதவிச் செயலர் Andrew Kefford, அண்மையில் இடம்பெற்ற ஒரு மாநாட்டில், ‘உலகளாவிய டிஜிட்டல் தளம்’ ‘global digital platform’ ஒன்றை உருவாக்கும் தனது திட்டத்தை பகிர்ந்து கொண்டார்.

    குறுகிய கால மற்றும் எளிய விசாக்களுக்கான விண்ணப்பங்களை பெற்றுப் பரிசீலித்து விசாவை வழங்குவதற்கான ஒரு வணிக ரீதியான அமைப்பு ஒன்றை வடிவமைத்து செயல்படுத்த ஒரு தனியார் அமைப்பை அரசு நியமிக்கவுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விசா விண்ணப்ப அமைப்புமுறையை தனியார்மயமாக்குவதற்கு அரசாங்கம் திட்டம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top