728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, February 27, 2018

    இரட்டை கொலைகளுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது


    டிசம்பர் மாதம் ரொட்டர்டம் இல் நடந்த இரட்டை கொலையுடன் தொடர்புடை 16 வயது இளைஞன் ஒருவன் பொலிஸாரார் கைது செய்யப்பட்டான். கொலை நடந்த போது இந்த இளைஞனின் வயது 15 என பொலிஸார் குறிப்பிட்டனர்.

    இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் நபர், நான்காவது சந்தேக நபர் ஆவார். மற்ற மூவரும் 18 வயது நிரம்பியவர்கள் ஆவர். இவர்களில் ஒருவரின் வீட்டில் Kalashnikov என்ற வகை துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதன் பின் அவர் கைது செய்யப்பட்டார்.

    டிசம்பர் 20ம் திகதி அன்று மாலை 7 மணி அளவில், 26 வயது கில்பர்ட் மற்றும் 25 வயது லின்டொமர் என்பவர்களே இவ்வாறு காருக்குள்ளேயே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். கறுப்பு ஔடி கார் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் Kalashnikov என்ற வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆயுத வல்லுனர்கள் தீர்மானித்தனர்.

    இந்த படுகொலைகளைச் செய்ய வேறு யாராலோ இந்த இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரட்டை கொலைகளுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top