728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, February 25, 2018

    ஸ்ரீ தேவி மரணத்திற்கு துபாய் ஓட்டல் தான் காரணமா? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!


    மிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!

    துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இவரது உடல் துபாயில் இருந்து மும்பை கொண்டுவரப்படுகிறது. மும்பையில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.

    நடிகை ஸ்ரீ தேவியின் மரணம் சினிமா உலகத்தையே சஞ்சலத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவர் துபாய் எமிரேட்ஸில் தங்கியிருந்த ஹோட்டலில் தான் இருந்த அறையின் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் தான் இறந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதனால் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தத்தால் மூளையில் கோளாறு ஏற்பட்டு மயக்கம் உண்டாகியிருக்கிறது. மேலும் அவர் இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது..
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஸ்ரீ தேவி மரணத்திற்கு துபாய் ஓட்டல் தான் காரணமா? - விசாரணையில் திடுக்கிடும் தகவல்.! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top