728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Saturday, February 24, 2018

    SMRT நிறுவன ஊழியர்களுக்கான வேலை விதிமுறை மேம்பாடு


    சிங்கப்பூரில் ,SMART நிறுவனம் தனது ஊழியர்களுக்கான வேலை விதிமுறைகளையும், அவர்களுக்கான சலுகைகளையும் மேம்படுத்தவிருக்கிறது.

    மேம்படுத்தப்பட்ட விதிமுறைகளின்கீழ், புதிய பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆரம்பச் சம்பளம் 10 சதவிகிதம் அதாவது மாதம் 3,800 க்கு உயர்த்தப்படுவதோடு, பணிஓய்வு வயதான 62ஐ தேர்ந்தெடுக்கப்படும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு 5 ஆண்டு வரை வேலை ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.

    தற்போது SMRT நிறுவனத்தில் 11 ஆயிரம் ஊழியர்கள் வேலையில் உள்ளனர். அடுத்த மாதத்திலிருந்து (மார்ச்) பட்டப்படிப்பில் மிகச்சிறந்த தேர்ச்சிபெற்ற பொறியாளர்களின் ஆரம்பச் சம்பளத்தை உயர்த்தவிருப்பதாக SMRT கூறியுள்ளது.

    ஆரோக்கியமாக இருக்கும் ஊழியர்கள் 62 வயதை எட்டும்போது அவர்களுக்கு ஐந்தாண்டு வேலை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டதோடு ,இதற்குமுன் அவர்கள் 7 ஆண்டுகளுக்கு ஆண்டு அடிப்படையில் மறுவேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது.

    தேர்ந்தெடுக்கப்படும் அனுபவமிக்க ஊழியர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு அனுப்பப்படுவர். தரக் கட்டுப்பாடு, சோதனை நடைமுறைகள், பாதுகாப்பு, பயிற்சி வழங்குதல் போன்ற பிரிவுகள் அதில் அடங்கும்.என்றும் SMRT நிறுவனம் கூறியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: SMRT நிறுவன ஊழியர்களுக்கான வேலை விதிமுறை மேம்பாடு Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top