728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, February 21, 2018

    இப்படி ஒரு ஆறு ஓட்டத்தை பார்த்ததுண்டா??? : பந்து வீச்சாளர் தலையில் பட்டு எல்லைக்கோட்டுக்கு பறந்த பந்து!!! (காணொளி)


    நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியொன்றில் விசித்திரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இதுவரையில் கண்டிராத ஆறு ஓட்டமொன்றை நியூஸிலாந்து அணியின் வீரர் ஜீட் ராவல் என்ற வீரர் அடித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

    இந்த ஆறு ஓட்டத்தில் துடுப்பட்ட வீரரின் பங்கை விடவும், பந்து வீச்சாளரின் பங்கு அதிகமென்பது இங்கு சுட்டிக்காட்டவேண்டிய ஒன்றாக மாரியுள்ளது.

    வேகப்பந்து வீச்சாளரான என்ரு எலிஸ் வீசிய பந்தொன்றை, துடுப்பாட்ட வீரர் ஜீட் ராவல் இலாவகமாக பந்து வீச்சாளரின் நேர் திசைக்கு உயர்த்தி அடித்துள்ளார். இந்நிலையில் குறித்த பந்தை பந்து வீச்சாளர் தடுக்க முற்பட்ட போது, பந்து நேரடியாக அவரது தலையை பதம் பார்த்ததுடன், நேரடியாக எல்லைக்கோட்டை தாண்டிச் சென்று விழுந்தது.

    நடுவர் அதனை ஆறு ஓட்டம் என அறிவித்தார். எனினும் குறித்த பந்து தாக்கியதில் பந்து வீச்சாளர் சில நிமிடங்கள் தலையை பிடித்துக்கொண்டு நின்றார். பின்னர் வைத்தியர்கள் உடனடியாக வருகைத்தந்து அவருக்கான சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

    எவ்வாறாயினும் உபாதை காரணமாக பெவிலியனுக்கு திரும்பிய குறித்த வீரர், மீண்டும் மைதானத்துககு வந்து பந்து வீசியதுடன், துடுப்பெடுத்தும் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இப்படி ஒரு ஆறு ஓட்டத்தை பார்த்ததுண்டா??? : பந்து வீச்சாளர் தலையில் பட்டு எல்லைக்கோட்டுக்கு பறந்த பந்து!!! (காணொளி) Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top