ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு ஏற்பாடு செய்யப்பட தனி விமானம் தூபாயில் இருந்து புறப்பட்டது.
நாளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள செலிபெரஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்படும்.
அதன் பின்னர் நாளை மாலை 3.30 மணிக்கு உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் வில்லேபர்லா மயானத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தாரின் முறைப்படி தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீதேவியின் பிறந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்ரீதேவியின் மரண செய்தியை கேட்டு தாங்கள் பெரும் துயரம் அடைந்தததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவி உடலுக்கு எம்பாமிங் பணி முடிந்தது. இதயனைடுத்து நடிகை ஸ்ரீதேவி உடலை துபாய் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அவரது உடல் இந்தியா கொண்டுவரப்படும். அதாவது அவரது உடல் மும்பை வந்து சேர கிட்டத்தட்ட இரவு 9:30 மணி ஆகும் எனக் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment