சிங்கப்பூரில், ஊபி தொழில்துறைக் கட்டடத்தில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தானது இன்று அதிகாலை ஊபி அவென்யுவில் உள்ள கட்டடத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டடத்தின் 2 தளங்களைத் தீ சூழ்ந்திருந்ததாகவும், சுமார் 2 மணி நேரத்தில் அது அணைக்கப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இதன் போது அங்கு இருந்த 11 ஊழியர்கள் உயிர் சேதமின்றி காப்பாற்றப்பட்டதுடன் எஞ்சியவர்களை மீட்கும் பணி இடம்பெறுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை தீயணைப்பாளர்கள் மேற்கொண்டனர்.
இந்த தி விபத்திற்கான கரங்கள் இது வரை தெரிவிக்கப்படவில்லை, அத்துடன் இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என பொலிஸார் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment