ஒரு தலைக்காதலால் 9 வகுப்பு மாணவிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், 12 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவகோட்டை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அச்சம்பட்டி அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரை அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் (20) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை தனது காதலை கூறியும் சிறுமி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், பள்ளி முடிந்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த பாலமுருகன், தான் கையில் கொண்டு வந்த கேனிலிருந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
உடலில் தீ பற்றி எரிய, வேதனை தாங்கமுடியாமல் சிறுமி அலறி துடித்துள்ளார். பாதி உடல் எரிந்த போது, அவ்வழியாக வந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக தீயை அணைத்து, சிறுமியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 12 நாட்களாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மாணவி, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார்.
இந்த சம்பவத்தில் பாலமுருகனை போலீசார் கைது செய்திருந்ததும், அவர் மீது ஏற்கனவே, இதே சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment