நிலவில் ஒருகுறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாமல், எல்லா பகுதிகளில் நீர் செறிந்திருப்பதாக, நாசா ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள நாசாவின் விண்கலமான எல்ஆர்ஓ (LRO) மற்றும் சந்திராயன்-1 விண்கலத்தில் இடம்பெற்ற மூன் மினராலஜி மேப்பர் (moon mineralogy mapper) என்ற கருவி மூலம் திரட்டப்பட்ட தகவல்களை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இதில், நிலவில் ஒருகுறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாமல், எல்லா பகுதிகளில் நீர் செறிந்திருப்பது தெரியவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் நிலவின் துருவப் பகுதிகளில் மட்டுமே நீர் இருக்கலாம் என கருதப்பட்டு வந்தது. எதிர்காலத்தில் நிலவில் ஆய்வுக்கு செல்பவர்கள், நிலவின் தரைக்கு கீழே உள்ள நீரை, கனிமங்களில் இருந்து பிரித்தெடுத்து பயன்படுத்துவது, நீரில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து சுவாசிப்பதற்கு பயன்படுத்துவது போன்றவை தொடர்பான ஆய்வுக்கு புதிய ஆய்வுத் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

0 comments:
Post a Comment