728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, February 22, 2018

    மோடியின் மோசடியை அமபலப்படுத்தும் கமல்


    இனிமேல் கமல்ஹாசனை உலக நாயகன் என்பது மட்டுமின்றி 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் என்றும் அவரது ரசிகர்கள் கூறலாம். அந்த அளவுக்கு நேற்று பிரமாண்டமாக தனது கட்சியின் தொடக்கவிழாவை அமைதியாக நடத்தி காட்டினார்.

    கமல் கட்சியின் கொடி, கொள்கை ஆகியவை தென்னிந்தியாவையும், திராவிடத்தையும் குறிக்கும் வகையில் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'இந்தியன் 2' திரைப்படம் தேசிய அளவில் நடந்த ஒரு ஊழலை வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலான கதை என்று கூறப்படுகிறது.

    செய்திகளை விரைவாக பெற எமது முகநூலில் இணைந்திருங்கள்

    அதாவது கடந்த சில நாட்களாக நாட்டையே பரபரப்பாக்கியுள்ள ஒரு விஷயம் வங்கியில் ரூ.11500 கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீரவ் மோடி என்ற தொழிலதிபர் தான். இந்த ஹாட்டான டாப்பிக் தான் ஷங்கரின் கைவண்ணத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள 'இந்தியன் 2' படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

    நீரவ் மோடியின் மோசடியை கையில் எடுக்க்கும் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் நிச்சயம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மோடியின் மோசடியை அமபலப்படுத்தும் கமல் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top