728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, November 20, 2016

    மதுபானசாலையை மூடு! எச்சரிககை சுவரொட்டி


    வவுனியா – பூந்தோட்டம்ப பகுதியில் உள்ள மதுபானசாலையை மூடுமாறு வலியுறுத்தி அப்பகுதியில் எச்ச ரிக்கையுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த தீபாவளி தினத்தன்று சிலர் மதுபோதையில் பூந்தோட்டம் பகுதியில் கைகலப்பில் ஈடுபட்டதுடன், இது இரு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனையாக உருவெடுத்திருந்ததாகவும்,

    பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு செல்பவர்களால் அப்பகுதியில் பிரச்சனைகள் தோற்றுவிக்கப்படுகின்றதாகவும் பொதுமக்களால் விசனம் வெளியிடப்பட்டிருந்தது.

    எனவே மக்களின் அன்றாட நடவடிக்கைக்கு இடையூறாக காணப்படும் குறித்த மதுபானசாலையை அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இனஐக்கியத்திற்கு இடையூறாக செயற்படும் இந்த மதுபானசாலையை மூடுமாறு வலியுறுத்தி கிராம மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், அதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மதுபானசாலையை மூடு! எச்சரிககை சுவரொட்டி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top