728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, November 20, 2016

    ஆவா குழு பற்றி தேவையற்ற பயத்தை ஏற்படுத்தும் சிலர்!


    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினைகளும் இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

    ஆவா குழு தொடர்பாக சிலர் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    வடக்கின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன காலியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கூறியிருந்தார்.

    இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர், ஆவா குழு என்பது பாதாள உலக குழு. பாதாள உலக குழு ஒன்றினால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முடியாது. சிலர் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆவா குழு பற்றி தேவையற்ற பயத்தை ஏற்படுத்தும் சிலர்! Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top