728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, November 20, 2016

    வடக்கை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் எச்சரிக்கை


    வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

    காலியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதைக் கூறியுள்ளார்.

    வடக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கட்டுப்படுத்தாமல் போனால் ஒரு பெரும் பிரச்சினையாக அது உருவாகும் என எச்சரித்துள்ளார்.

    நாட்டில் தற்போழுது காணப்படும் பாதுகாப்பு நிலைமை குறித்து தம்மால் திருப்தியடைய முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

    மேலும், நாட்டில் இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டால் வடக்கில் தோன்றிய ஆவா குழுக்கள் போன்று மேலும் பல குழுக்கள் உருவாகுவதை தவிர்க்க முடியாது எனவும் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் எச்சரிக்கை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top