728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, November 17, 2016

    சுவிஸில் ஏ.டி.எம் கொள்ளை! திறமையாக பிரான்ஸிற்கு தப்பிய குற்றவாளிகள்: திணறும் பொலிஸ்


    சுவிட்சர்லாந்தில் நான்கு மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்தில் புகுந்து கொள்ளையடித்து விட்டு பிரான்ஸிற்கு தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Neuchâtel மாகாணத்தின் Brenets பகுதியில் உள்ள மாகாண வங்கி ஏடிஎம் மையத்திலே இக்கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இரவில் முகமூடி அணிந்து தகுந்த ஆயுதங்களுடன் ஏடிஎம் மையத்தில் நுழைந்த நான்கு மர்ம நபர்கள், மிக திறமையாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமெராக்களை செயழிக்க செய்துள்ளனர்.

    பின்னர், இயந்திரத்தை சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடித்து பிரான்ஸ் பதிவு எண் கொண்ட காரில் பிரான்ஸிற்கு தப்பி சென்றுள்ளனர்.இந்நிலையில், சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தடயம் ஏதும் கிடைக்காததால் திருட்டு குறித்து தகவலறிந்தவர்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுவிஸில் ஏ.டி.எம் கொள்ளை! திறமையாக பிரான்ஸிற்கு தப்பிய குற்றவாளிகள்: திணறும் பொலிஸ் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top