728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, November 18, 2016

    ரயில் மின்கம்பியை தலையால் தொட்டு வெடித்து சிதறிய நபர்! பதற வைக்கும் வீடியோ


    இந்தியாவில் நபர் ஒருவர் ரயில் மீது ஏறி மின்கம்பியை தலையால் தொட்டு வெடித்து சிதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குறித்த வீடியோவில் பேசும் மொழியை வைத்து சம்பவம் இந்தியாவின் தென் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது என தெரிகிறது.

    குறித்த வீடியோவில், நபர் ஒருவர் ரயில் நிலையத்தில் மேல்கூரை மீது ஏறி நிற்கிறார். மற்றொரு நபர் அவரை தடுக்க முற்படுகிறார். சற்று தூரத்தில் மக்களும் பொலிசாரும் நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

    பேசிக்கொண்டிருந்த நபர் திடீரென நடைமேடையில் நின்றுக்கொண்டிருந்த ரயில் மீது குதிக்கிறார்.

    பின்னர், ரயில் மீது புகைப்பிடித்துக்கொண்டிருக்க திடீரென அவர் தலை மின்கம்பியில் தொட்டு வெடித்து சிதறி ரயில் மேல் விழுகிறார்.

    இந்தக்காட்சியை அங்கிருந்த நபர் ஒருவர் தனது போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

    குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டாரா? மனநிலை பாதிக்கப்பட்டவரா? என தெரியவில்லை.

    எனினும், சில தினங்களுக்கு முன் நடந்துள்ள சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி பதற வைத்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரயில் மின்கம்பியை தலையால் தொட்டு வெடித்து சிதறிய நபர்! பதற வைக்கும் வீடியோ Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top