728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, November 16, 2016

    தமிழ் அரசியல் கைதிகள் 13 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில்


    தமிழ் அரசியல் கைதிகள் 13 பேரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 13 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் அரசியல் கைதிகள் 13 பேர் கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டிருந்த வேளையில், அவர்களை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார்.

    அரசியல் கைதிகள் சார்பில் சட்டத்தரணிகள் டி.எஸ் நிரஞ்சன் மற்றும் டியூக் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ் அரசியல் கைதிகள் 13 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top