728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, October 21, 2016

    யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை ?


    யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

    குளப்பிட்டி பகுதியில் நேற்று இரவு உயிரிழந்த மாணவர்களின் மரணம் மோட்டார் சைக்கிள் விபத்தினால் ஏற்பட்டள்ளது என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இருப்பினும் இது விபத்து அல்ல என்றும், குறித்த மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது வைத்தியசாலையில் இருந்து தகவல் தெரிய வந்துள்ளது.

    எனினும் மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த மரணத்தில் பலத்த சந்தேகங்கள் மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதையடுத்து உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட நிலையில் அறிக்கையின் படி இது கொலை என தற்போது உறுதியாகி உள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

    மாணவர்கள் மீதும் மோட்டார் சைக்கிள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை ? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top