728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, October 9, 2016

    தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி

    போர்ட் எலிசபெத்: நான்காவது ஒருநாள் போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க அணி 3–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று, நான்காவது போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடந்தது.

    மார்ஷ் ஆறுதல்: ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு, கைல் அபாட் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ஆரோன் பின்ச் (2), டேவிட் வார்னர் (6) அவுட்டாகினர். ஜார்ஜ் பெய்லி (1), டிராவிஸ் ஹெட் (0) ஏமாற்றினர். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் (21) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மிட்சல் மார்ஷ் (50), மாத்யூ வேட் (52) அரைசதம் அடித்தனர்.

    ஆஸ்திரேலிய அணி 36.4 ஓவரில் 167 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. டிரிமைன் (23) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அபாட் 4, ஷாம்சி 3 விக்கெட் கைப்பற்றினர்.

    டுபிளசி அபாரம்: சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (4), குயின்டன் டி காக் (18) ஏமாற்றினர். டுமினி (25) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் டுபிளசி (69) அரைசதம் கடந்தார். ரூசோவ் (33*) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 35.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்க அணி 4–0 என முன்னிலை பெற்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top