728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, October 16, 2016

    நடிகையின் விபத்து தொடர்பில் சாரதி கைது


    நடிகை கவீஷா அயேஷானியின் விபத்து தொடர்பாக பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

    விபத்துக்குள்ளான பஸ் வண்டி நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டென்லி திலக்கரட்ன மாவத்தைக்கு எதிரில் ஜூப்ளி கணுவ பகுதியில் இருந்து நிரோமி சந்தியை நோக்கி சென்ற கார், எதிர் திசையில் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

    மேலும், சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற நடிகை கவீஷா அயேஷானி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.

    சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளது.

    இதேவேளை, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நடிகையின் விபத்து தொடர்பில் சாரதி கைது Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top