728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, October 13, 2016

    பாலியல் துஷ்பிரயோகம் செய்தால்: புதிய சட்டம் அறிமுகம்


    குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்படுத்தியமை நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கும் புதிய சட்டத்திற்கு இந்தோனேசியா அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளது.

    இந்தோனேசியாவில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    எனினும் கடந்த மாதம் 14 வயது சிறுமி ஒருவர் 7 வாலிபர்களால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றத்தில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இருப்பினும் இந்தோனேசிய ஜனாதிபதியான Joko Widodo இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

    இதன் படி சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது இராசயனம் செலுத்தப்பட்டு ஆண்மையை நீக்கும் தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், பாலியல் உணர்வுகளை தூண்டும் ஆண்களுக்கு அவர்களின் டெஸ்டோஸ்டிரோன்கள் நீக்கப்பட்டு பெண்களுக்குரிய ஹார்மோன்கள் உடலுக்குள் செலுத்தப்படும்.

    ஆண்மையை நீக்கும் இதுபோன்ற கடுமையான சட்டங்கள் போலந்து, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா ஆகிய சில மாகாணங்களில் தற்போது நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாலியல் துஷ்பிரயோகம் செய்தால்: புதிய சட்டம் அறிமுகம் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top