728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, October 12, 2016

    உண்மையில் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே முதல்வருக்கு பாதுகாப்பு

    வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே அவருக்கு அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரனவிதாண தெரிவித்துள்ளார்.

    அவருக்கு உண்மையான அச்சுறுத்தல் இல்லாமல் வெறுமனே அரசியல் ரீதியான காரணங்களுக்காக பாதுகாப்பு கோரப்பட்டால், பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் கூறினார்;.

    கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

    ‘வடமாகாண முதலமைச்சருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். உண்மையிலேயே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமா? என்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.

    அவ்வாறு அச்சுறுத்தல் இருப்பது உண்மையானால் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தும். ஆனால் வெறும் அரசியல் தேவைகளுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ பாதுகாப்பு கேட்கப்படுமானால் அதை அரசு பெற்றுக்கொடுக்காது.’ என்றும் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உண்மையில் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே முதல்வருக்கு பாதுகாப்பு Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top