728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, October 11, 2016

    பாடகர் பாலா வருகை! யாழ். மாநகரசபைக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?


    தென்னிந்திய பிரபல பாடகர் பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

    தென்னிந்திய கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் ஆகியோரின் யாழ். வருகையின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

    மேற்படி மாநகரப் பிரதேசத்திற்குள் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு வரியாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தினை பயன்படுத்தியதற்கான 3 நாட்களிற்கான வாடகை நாள் ஒன்றிற்கு 11 ஆயிரம் ரூபா வீதம் 33 ஆயிரம் ரூபாவும் இதற்கான 13 வீத வரிப்பணமும் மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்றது.

    இதன் பிரகாரம் யாழில் இடம்பெற்ற நிகழ்வினால் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா அளவிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. எனவும் சுட்டிக்காட்டினார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாடகர் பாலா வருகை! யாழ். மாநகரசபைக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top