728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, October 13, 2016

    மானிப்பாய் வாள்வெட்டு வழக்கு! நீதிமன்றத் தீர்ப்பு சரியானதே! இளஞ்செழியன் அதிரடி

    மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டதீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடிசெய்துள்ளார்.

    வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய காயம்மற்றும் கடும் காயம் விளைவித்தமை, 6 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பெறுமதியானபொருட்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,

    6 எதிரிகளுக்குஎதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கில் எதிரிகளுக்கு ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனையும், 6 லட்சத்து 61 ஆயிரம் நட்டஈடு செலுத்துமாறும் மல்லாகம் நீதிமன்றம் இன்று (13) வழங்கிய தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட எதிரிகள் தாங்கள் சுற்றவாளிகள் எனதெரிவித்ததையடுத்து, நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் இந்தத் தீர்ப்பைமல்லாகம் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

    இதனையடுத்து. இந்தத் தீர்ப்புக்கு எதிராக 3 எதிரிகள் யாழ் மேல் நீதிமன்றத்தில்மேன் முறையீடு செய்தனர்.

    இந்த மேன் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிஇளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.

    விசாரணை காலத்தில் மனுதாரர்களுக்கு பிணை வழங்க மேல் நீதிமன்றம்மறுத்துவிட்டது. இதனால், எதிரிகள் சிறையில் இருக்க மேன் முறையீட்டு மனு மீதானவிசாரணை வழக்கு நடைபெற்றது.

    இந்த வழக்கு நேற்று புதன்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி, மல்லாகம் நீதிமன்றத்தில் தீர்ப்புவழங்கப்பட்ட தினமாகிய 28.04.2016 ஆறாம் திகதியில் இருந்து சிறைவாசம்அனுபவித்துக் கொண்டிருப்பதனால். அந்தத் தினத்தில் இருந்து தண்டனைஅனுபவிப்பதற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி, மேன் முறையீட்டுமனுவை கைவாங்குவதாக நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.

    இந்த விண்ணப்பத்திற்கு அரச சட்டவாதி ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.இதனையடுத்து மல்லாகம் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட ஓராண்டு காலகடூழியச் சிறைத் தண்டனைத் தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தி நீதிபதிஇளஞ்செழியன தீர்ப்பளித்தார்.

    அத்துடன், மல்லாகம் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட 6 லட்சத்து 61 ஆயிர்ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என்ற உத்தரவும் சரியான தீர்ப்பு என அவர் தனதுதீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

    இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துமாறும், மல்லாகம் நீதிமன்றத்தில் தீர்ப்புவழங்கப்பட்ட திகதியில் இருந்து எதிரிகளின் சிறைத் தண்டனைக் காலம் கணிப்பிடப்படவேண்டும் என சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவிக்குமாறு மல்லாகம் நீதிபதிக்குயாழ் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த எதிரிகளிடம், மல்லாகம் நீதிமன்றத்தில்வழங்கப்பட்ட தீர்ப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும், மேல் நீதிமன்றம் உங்களுக்குக் கருணை காட்டியுள்ளது.

    சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர், வரும்காலங்களில் எதுவிதமான வாள்வெட்டுச் சம்பவங்களிலும் ஈடுபடக் கூடாது. சமூகம்திரும்பிப் பார்க்கத்தக்க வகையில் நற் பிரஜைகளாக வாழ வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தினார்.

    இந்த வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி நாகரட்னம் நிசாந்தனும், எதிரிதரப்பில் சட்டத்தரணி திருக்குமரனும் முன்னிலையாகியிருந்தனர்..
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மானிப்பாய் வாள்வெட்டு வழக்கு! நீதிமன்றத் தீர்ப்பு சரியானதே! இளஞ்செழியன் அதிரடி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top