728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, October 12, 2016

    பொலிஸாருக்கு எதிரான பெண்களிடம் இருந்து கிடைக்கும் அதிக முறைபாடு


    மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள போக்குவரத்து பொலிஸாருக்கு எதிரான அதிகமான முறைபாடு பெண்களிடம் இருந்து மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்திருப்பதினால் போக்குவரத்து பொலிசாரின் நடவடிக்கை குறித்து, உரிய நடவடிக்கையெடுக்கமாறு மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவு பிரப்பித்துள்ளார்.

    கடந்த காலங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் கடமைகளில் வீதிகளில் நிற்கும் போது மோட்டார் சைக்கிள்களில் போக்குவரத்து செய்யும் இளம் பெண்களை நிறுத்தி அவர்களிடமிருந்து பல்வேறு போக்குவரத்து சட்டங்களை கூறி, பல மணி நேரம் வீதிகளில் நிறுத்தி கதைப்பது, அவர்களிடம் இருந்து தொலைபேசி இலக்கங்களை பெறுவது, தாகாத முறையிலான பல விடங்களை பேசுவது போன்ற பல்வேறுபட்ட முறைப்பாடுகள் மாவட்ட நீதிமன்றுக்கு கிடைக்கப்பெற்று இருப்பதினால் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை உடன் நிறுத்தும் முகமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளை அழைத்து குறித்த விடயம் தொடர்பாக உரிய கவனம் செலுத்துமாறும், குறித்த போக்குவரத்து பொலிசாரின் இவ்வாறான நடத்தைகளுக்கு மிக விரைவாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் மா.கணேசராஜா கட்டளை பிரப்பித்துள்ளார்.

    போக்குவரத்து பொலிசாரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து மாவட்டத்தின் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியதுடன், மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளையும் அழைத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அதற்கான கட்டளையை நீதிவான் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை கடந்த புதன்கிழமை (5) மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் இருந்து அதிகரித்துவரும் குற்றங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுத்து குறைப்பது போன்ற விடங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அவர்களின் அழைப்பின்பேரில் மாவட்ட திறந்த நீதிமன்ற கட்டத்தொகுதியில்இடம்பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொலிஸாருக்கு எதிரான பெண்களிடம் இருந்து கிடைக்கும் அதிக முறைபாடு Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top