728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, October 12, 2016

    ஈழ அகதிகளுக்கு கப்பல் சேவை

    தமிழ் நாட்டில் வசித்து வருகின்ற 2 ஆயிரத்து 508 ஈழ அகதிகள் நாடு திரும்ப தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் தற்போது இந்திய அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள இலங்கை அகதிகளின் பெயர் விபரங்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

    ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் எஸ்.சீ. சந்திரஹாசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

    அவர்கள் அனைவரும் நாடு திரும்புவதற்கான விசேட கப்பல் ஒன்றை ஒழுங்கு செய்வதாக, சுஷ்மா சுவராஜ் உறுதியளித்திருப்பதாகவும் சந்திரஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கான செலவினங்களை இந்திய அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈழ அகதிகளுக்கு கப்பல் சேவை Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top