728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 21, 2017

    கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர தகவல்


    கொழும்பின் பல பாகங்களில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கை குறைந்த அழுத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர் வழங்கும் நடவடிக்கை குறைந்த அழுத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

    இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை மாலை வரை இவ்வாறே நீர் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை மற்றும் மருதானை ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

    அம்பத்தலே நீர் சுத்திகரிப்பிடத்தில் இருந்து கொழும்பு நீர் சுத்திகரிப்பிடம் வரையிலான பிரதான நீர் கட்டமைப்பில் அவசர திருத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அந்த பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர தகவல் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top