728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, April 19, 2017

    இலங்கை அணியை சொந்த மண்ணில் கதறவிட்ட வங்கதேச அணிக்கு இத்தனை கோடி பரிசா?


    இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச அணிக்கு அந்நாட்டு பிரதமர் 2 கோடி ரூபாய் காசோலை கொடுத்து வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

    வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித தொடர்களில் விளையாடியது, இதில் மூன்று தொடர்களும் சமநிலையில் முடிந்தது.

    இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் ஒருதொடர் கூட கைப்பற்ற விடாமல் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச அணிக்கு அந்நாட்டு ரசிகர்கள் தற்போது வரை வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் வங்கதேச பிரதமர் Sheikh Hasina வங்கதேச வீரர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசாக கொடுத்துள்ளார்.

    இதில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வங்கதேச அணியின் ஒரு நாள் அணி தலைவரான Mashrafe Bin Mortaza-விடமும் , மற்றொரு ஒரு கோடிக்கான காசோலையை வங்கதேச அணியின் டெஸ்ட் அணி தலைவரான Mushfiqur Rahim-மிடமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக காசோலை கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை அணியை சொந்த மண்ணில் கதறவிட்ட வங்கதேச அணிக்கு இத்தனை கோடி பரிசா? Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top