728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Monday, April 17, 2017

    வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போரின் கவனத்திற்கு


    இலங்கையில் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

    இதன் கீழ் இலகு ரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்.

    இதற்கு தேவையான ஆவணங்கள்

    ஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம்.

    விண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமதிப் பத்திரம்.

    சாரதி அனுமதிப் பத்திரம் ஆங்கில மொழியில் இல்லாத பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு. (English transportation)

    இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரிடமிருந்து 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சான்றிதழ். (Medical certificate)

    வெளிநாட்டு தூதுவர் சேவைக்கு உரித்தான ஒருவராயின் அதனை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படுகின்ற கடிதம்.

    தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட செல்லுபடியான கடவுச்சீட்டு

    கட்டண விபரம்

    சாதாரண சேவை கட்டணம் - 2500ரூபா

    ஒருநாள் சேவை கட்டணம் - 3000ரூபா

    ஒருநாள் சேவையை தலைமையகத்தில் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.

    மேலதிக விபரங்களுக்கு
    Department of motor traffic head office
    No. 341, Alvitigala Mawatha, Colombo 05,
    Narahenpita.

    Phone no : +94 11 2694331, 2694332, 2694333, 2694334, 2694335, 2694336

    Email : info@motortraffic.gov.lk
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போரின் கவனத்திற்கு Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top