728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Wednesday, April 19, 2017

    எல்லோரும் விமர்சிக்க டோனிக்கு ஆதரவு தெரிவித்த பிரபல வீரர்


    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தோனி தடுமாறுவதாக ஒரு சிலர் விமர்சனம் செய்துள்ள நிலையில் அவருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணியின் விக்கெட் கீப்பர் தோனி தடுமாறுவதை ஒரு சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அவருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆதரவு தெரிவித்துள்ளார்.

    வார்னே தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தோனி ஒரு தரம் வாய்ந்த அற்புதமான வீரர். மிகச்சிறந்த கேப்டனும் கூட. மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறார். அவர் யாருக்காகவும், எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

    தோனி இந்த சீசனில் 5 ஆட்டங்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எல்லோரும் விமர்சிக்க டோனிக்கு ஆதரவு தெரிவித்த பிரபல வீரர் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top