728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, April 25, 2017

    மொனராகலையில் சிறுமி தொடர்ச்சியாக துஷ்பிரயோகம்: பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்கள்

    மொனராகலை தனமல்வில பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரது தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சிறுமியின் தாய், தாத்தா மற்றும் இராணுவ சிப்பாயான மாமாவை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

    தனமல்வில பகுதியின் உஸ்ஸகல என்ற கிராமத்தில் பதின்மூன்று வயது சிறுமி தனது உறவினர்களால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த சிறுமி அவரது தாத்தா மற்றும் மாமா ஆகியோரால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

    குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் இரண்டாவது கணவனும் தொடர்புபட்டுள்ளதாகவும் எனினும் அவரை கைது செய்ய சென்றவேளைஅவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி மொனராகலை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மொனராகலையில் சிறுமி தொடர்ச்சியாக துஷ்பிரயோகம்: பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்கள் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top