728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Thursday, April 20, 2017

    பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக்கியது மும்பை! ஆம்லா சதம் வீண்.... காணொளி இணைப்பு

    ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளது.

    இந்தூரில் நடந்த போட்டியில் பஞ்சாப், மும்பை இந்தியான்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

    அதன் படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆம்லா, மேக்ஸ்வெல் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஆம்லா 60 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரி விலாசி 104 ஓட்டங்கள் குவித்தார்.

    இதனையடுத்து 199 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர்களான பார்தீவ் பட்டேல் 18 பந்துகளில் 37 ஓட்டங்களும், அதிரடியாக விளையாடிய பட்லர் 37 பந்துகளுக்கு 5 சிக்சர், 7 பவுண்டரி விலாசி 77 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.

    இவர்களை போல் சிறப்பாக விளையாடிய ராணா 34 பந்துகளில் 7 சிக்சர் விலாசி 62 ஓட்டங்கள் எடுக்க, மும்பை அணி 15.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக்கியது மும்பை! ஆம்லா சதம் வீண்.... காணொளி இணைப்பு Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top