728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Friday, April 21, 2017

    டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

    இலங்கை ரூபாய்யின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்வதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

    இறக்குமதியாளர்களிடம் டொலருக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    அமெரிக்க டொலர் ஒன்றுக்காக காணப்பட்ட 152.15/25 என்ற ரூபாய் பெறுமதி புதன்கிழமை வரையில் 153.40/50 வரை வீச்சியடைந்துள்ளது.

    சிறிய வங்கிகளிடம் இறக்குமதி தேவை உள்ள போதிலும், சந்தை வழங்கல் போதுமானதாக இல்லை என நிதி தரகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    உயர் வர்த்தக நிதி உண்டியல்களை கொண்ட இறக்குமதியாளர்களிடம் டொலருக்கான தேவை அதிகமாக உள்ளதென தரகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top