728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, April 16, 2017

    மின்னல் வேக ஸ்டம்பிங்கில் அசத்திய டோனி : வைரலாகும் காணொளி


    இந்திய அணியின் இரு நட்சத்திர வீரர்களும் நேற்று நடந்த ஐபில் போட்டியில் மின்னல் வேக ஸ்டம்பிங் மற்றும் ஒத்தை கையில் கேட்ச் என்று அசத்தியுள்ளனர்.

    நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் ஸ்மித் தலைமையிலான புனே அணியும், கோஹ்லி தலைமையிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

    இப்போட்டியில் புனே அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கிடையில் இந்த ஆட்டத்தின் முதலில் புனே அணி துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

    அப்போது பெங்களூரு அணியின் துடுப்பாட்ட வீரரான ராகுல் திருப்பதி 23 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, நெகி வீசிய 8.3 வது ஓவரை எதிர் கொண்டார். திருப்பதி கொடுத்த கேட்சை இடது கவர் பீல்டர் பகுதியில் நின்றிருந்த பெங்களூரு அணியின் தலைவர் கோஹ்லி அற்புதமாக பறந்து இடது கையால் கேட்ச் பிடித்து கலக்கினார்.





    இவர் தான் இப்படி என்றால், புனே அணியில் இருந்த டோனியும் ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் செய்தார். வெற்றி இலக்கை துரத்துவதற்கு பெங்களூரு அணி ஆடிக்கொண்டிருந்த போது, புனே அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் 10.2-வது ஓவரை டிவில்லியர்சுக்கு வீசினார்.

    அதை எதிர்கொண்ட டிவில்லியர்ஸ் பேட்டில் தடுக்க முடியாமல், கீப்பரான டோனியிடம் விட, பந்தை பிடித்த வேகத்தில் டோனி ஸ்டம்பிங் செய்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத டிவில்லியர்ஸ் அவுட்டானதை ஜீரணிக்க முடியாமல் பெளவிலியன் திரும்பினார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மின்னல் வேக ஸ்டம்பிங்கில் அசத்திய டோனி : வைரலாகும் காணொளி Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top