728x90 AdSpace

  • Latest News

    Powered by Blogger.
    Sunday, April 23, 2017

    வடக்கின் நட்சத்திர நாயகிகளான மூன்று யுவதிகள்! தேசிய சாதனை படைத்து அசத்தல்


    மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் சாதனை படைத்துள்ளார்.

    இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமானது.

    இன்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் அனிதா ஜெகதீஸ்வரன் 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான போட்டியில் களமிறங்கியிருந்தார். இதில் அவர் 03.40 மீற்றருக்கு தாவி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

    இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேவேளை, 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலுன்றிப் பாய்தல் போட்டியில் 2.90 மீற்றருக்கு பாய்ந்த வி. கிரிஜா வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

    மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் எஸ். சங்கவி 18 வயதிற்குட்பட்டவர் பிரிவில் 33.05 மீற்றருக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

    இதன் மூலமாக வடமாகாணத்தின் நட்சத்திர நாயகிகளாகியுள்ளார்கள் இந்த மூன்று யுவதிகளும். அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினரும், பெற்றோரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வடக்கின் நட்சத்திர நாயகிகளான மூன்று யுவதிகள்! தேசிய சாதனை படைத்து அசத்தல் Rating: 5 Reviewed By: EDITOR
    Scroll to Top